2010年6月27日日曜日

முன்னுரை பாடம் 1: ஜப்பானிய மொழி எழுத்து முறைகள்

முன்னுரை பாடம் 1: ஜப்பானிய மொழி எழுத்து முறைகள்

ஜப்பானிய மொழியானது மூன்று எழுத்து முறைகளை கொண்டது.
1.ஹிரகனா
2.கதாகனா
3. காஞ்சி
4.ரோமாஜி (ஆங்கில எழுத்துகளை எழுதும் முறையாகும். இது ஜப்பானிய எழுத்து முறை கிடையாது.)

1.ஹிரகனா
இது ஜப்பானிய மொழி சொற்களை எழுதுவதற்கு பயன்படுகிறது.
உதாரணம் 1:
தென்ஷா என்பது மின்சார இரயில். இது ஜப்பானிய மொழி சொல் என்பதால் ஹிரகனாவில் でんしゃ என எழுதப்படும்.
2.கதாகனா
இது வேற்று மொழி சொற்கள்,வெளிநாட்டு மக்களின் பெயர்கள் , வெளிநாட்டின் இடங்களின் பெயர்கள் ஆகிய‌வற்றை எழுத பயன்படுத்தப்படுகிறது.
உதாரணம் 2:
கேக் இது ஆங்கில சொல் என்பதால் கதகனாவில் ケーキ(கேகி) என எழுதப்படும்.
3. காஞ்சி
இது சீன எழுத்து வடிவம். ஒவ்வொரு எழுத்தும் ஒரு பொருளை கொண்டதாக இருக்கும்.
உதாரணம் 3:
山 - やま - யமா - மலை
川 - かわ - கவா - ஆறு
雨 - あめ - அமெ - மழை
4.ரோமாஜி
மேற்கூறிய மூன்று முறைகளை தவிர்த்து ரோமாஜி என்ற ஆங்கில எழுத்து முறையும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்திலேயே எழுதுவதைதான் ரோமாஜி முறை என குறிக்கப்படுகிறது. சில சமயங்களில் கம்பெனியில் பெயர்களோ, சுருக்கச்சொற்களோ ஆங்கிலத்தில் எழுதப்படும்.

உதாரணம் 4:
வாக்கியம்:わたしは IMC の かいしゃいん です
உச்சரிப்பு : வாதஷிவா ஐ எம் சி னோ கைஷாஇன் தெஸ்.
பொருள்: நான் ஐ எம் சி கம்பெனி அலுவகர்.
இதில் IMC என்பது ஆங்கில எழுத்திலேயே எழுதப்பட்டுள்ளது. இதுதான் ரோமாஜி முறை என அழைக்கப்படுகிறது.

உதாரணம் 6:
கீழுள்ள வாக்கியத்தில் ஹிரகனா, கதகனா, காஞ்சி மற்றும் ரோமாஜி முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கியம்:私は Lawsonデパートへ いきます.
உச்சரிப்பு : வாதஷிவா லாசன் தெபாதேஏ இக்கிமாஸ்.
பொருள்: நான் லாசன் கடைக்கு போறேன்.

காஞ்சி எழுத்து முறை
Lawson ரோமாஜி
デパート கதகனா
いきます ஹிரகனா

திருத்தங்கள்/பிழைகள்/நிறைகுறைகளை பின்னூட்டத்திலோ navaniithan@gmail.com என்ற மின்னஞ்சலிலோ தெரிய்படுத்தவும்.

2 件のコメント:

  1. வந்து அமர்கிறேன் வகுப்பறையில்

    返信削除