காஞ்சி
இது சீன எழுத்து வடிவம். ஒவ்வொரு எழுத்தும் ஒரு பொருளை கொண்டதாக இருக்கும்.
山 - やま - யமா - மலை
川 - かわ - கவா - ஆறு
雨 - あめ - அமெ - மழை
தனித்தனியாக ஒவ்வொரு காஞ்சியும் ஒவ்வொரு பொருள் தரும். இரண்டு காஞ்சியை இணைத்தால் ஒரு புதிய அர்த்தத்தை கொடுக்கும்.
உதாரணம் 1:
毎 - まい - மாயி - தினமும்/எப்பொழுதும்
日 - にち - நிச்சி - நாள்/கிழமை.
இரண்டு காஞ்சியையும் சேர்த்து எழுதினால் ஒவ்வொருநாளும் என்ற அர்த்தததை கொடுக்கிறது.
毎 + 日 = 毎日 = まいにち = மாயிநிச்சி = ஒவ்வொருநாளும்
年-ねん-நென் -வருடம்.
இதற்கு முன்னால் 毎 (மாயி) என்பதை சேர்த்தால் ஓவ்வொருவருடமும் என பொருள்தரும்.
毎 + 年 = 毎年 = まいねん=மாயிநென் = ஓவ்வொருவருடமும்
ஒவ்வொரு காஞ்சியும் பல்வேறு உச்சரிப்புகளை கொண்டிருக்கும்.
உதாரண்ம் 2:
今 【いま】[இமா] இப்பொழுது
週 【しゅう】 [ஸுயு] வாரம்
今週 【こんしゅう】 என்பது இந்த வாரம் என பொருள் தரும். ஆனால் இதை இமாஸுயு என படிக்கக்கூடாது. கொன்ஸுயு என்றுதான் படிக்க வேண்டும்.
今(கொன்) + 週 (ஸுயு) = 今週 (கொன்ஸுயு) இந்தவாரம்.
உதாரணம்1ல் காஞ்சியிம் உச்சரிப்பும் பொருளும் மாறாமல் இருக்கிறது. இதை சீன உச்சரிப்பு (Chinese reading/On'yomi) எனப்படும்.
உதாரணம்2 ல் காஞ்சியின் பொருள் ஒன்றாக இருப்பினும் உச்சரிப்பு ஜப்பானிய உச்சரிப்பாகும். இது ஜப்பானிய உச்சரிப்பு (Japanese reading/Kun'yomi) எனப்படும்.
-நவநீதன்
இருங்க பஸ்ட்டு ஒரு ஜப்பான் பிகர கரக்ட் பண்ணிட்டு வாரேன்
返信削除