2010年7月16日金曜日

பாடம் 1.2 தமிழ் வழியில் ஜப்பானிய மொழி (கேள்வி வாக்கியங்கள்)

பாடம்: கேள்வி வாக்கியங்கள்

பெரும்பாலான மொழிகளில் கேள்வி கேட்பதற்கு “?” யை பயன்படுத்துகிறோம், ஆனால் ஜப்பானிய மொழியில் ?விற்கு பதிலாக வாக்கியத்தின் முடிவில் ‘か’ வை பயன்படுத்துகிறார்கள்.

a) サントスさんも  かいしゃいん です。
    சந்தோஷ்ம் கம்பெனி அலுவகர்.
b)サントスさんも  かいしゃいん です
    சந்தோஷ்ம் கம்பெனி அலுவகரா?.

உதாரணங்கள்

1 [あなたは] ミーラさん です
はい、ミーラ です.
விளக்கம்:
நீங்கள்தான் மீரா என்பரா?
ஆம், நான்தான் மீரா.

2.ミーラさんは がくせい です
はい、がくせい です.
விளக்கம்:
மீரா மாணவரா?
ஆம், மாணவர்தான்.

3.サントスさんは エンジニア です
いいえ、 エンジニアじゃ ありませんん。かいしゃいん です。
விளக்கம்:
சந்தோஷ் பொறியியலாளரா?
இல்லை, பொறியியலாளர் இல்லை. கம்பெனி அலுவகர்.
4.あの かたは どなたです
ミーラさんです。 さくら だいがくの がくせい です。
விளக்கம்:
அந்த மனிதர் யார்?
மீரா அவர்கள். சகுரா பல்கலைகழகத்தின் மாணவர் ஆகும்.
5.ミーラさんは なん さい です
16 さい です。
விளக்கம்:
மீராவிற்கு என்ன வயது?
16 வயது.

இலக்கண விளக்கம்

பாடம் 1.1 ல் உள்ளதுபோல ஒரே மாதிரியான கேள்விகள் தொடர்ந்து கேட்கும்போதும் விற்கு பதிலாக பயன்படுகிறது. இலக்கணம்,சாரியை எதுவும் மாறுவதில்லை, வாக்கியத்தின் முடிவில் மட்டும் சேர்த்தால் அது கேள்வியாக மாறிவிடும்.
உங்கள் சந்தேகங்களையும், தேவைகளையும் எங்களுக்கு அனுப்பினால் பதிலளிக்க காத்திருக்கிறோம். மின்னஞ்சல் முகவரி navaniithan@gmail.com
-நவநீதன்

2010年7月11日日曜日

பாடம் 1.1 தமிழ் வழியில் ஜப்பானிய மொழி

வாக்கிய அமைப்பு:
1.わたしは ミーラ です
நான் மீரா.
2.ミーラさんは がくせいじゃ ありません。
மீரா மாணவர் அல்ல.
3.ミーラさんは かいしゃいん です。
மீரா கம்பெனி அலுவகர்.
4.サントスさん  かいしゃいん です。
சந்தோஷ்ம் கம்பெனி அலுவகர்.

இலக்கண விளக்கம்
1. என்பது ஹா (ha)ஆகும். ஆனால் இதை சாரியையாக(Particle) பயன்படுத்தும்போது (வா)(wa) என படிக்க வேண்டும். இது Topic marker என்று அழைக்கப் படுகிறது.
2. です என்பது மரியாதை நிமித்தமாக பயன்படுத்தப் படுகிறது. தமிழில் அவர்கள் என்பது போல்.
3. さん என்பது ஒருவரை மரியாதையாக அழைக்க பயன்படுத்தப்படுகிறது. தமிழில் திரு/திருமதி/செல்வன்/செல்வி さん அனைத்திற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
4. என்பதும் சாரியை ஆகும். உதாரண வாக்கியத்தில் உள்ள 3மற்றும் 4 இரண்டும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன எனினும், முதலில் は வும் இரண்டாவதாக ம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதல் வாக்கியம் மீரா கம்பெனி அலுவகர். என்று பொருளும், இரண்டாவது வாக்கியம் சந்தோஷ்ம் கம்பெனி அலுவகர். என்றும் பொருள் தருகிறது. நானும் என்று பயன்படுத்துவதற்கு இணையானது.

உதாரணம்.

1.
அ) மீரா ஆசிரியர்
ミーラさんは かいしゃいん です。
ஆ) சந்தோஷ்ம் ஆசிரியர்
サントスさん  かいしゃいん です。
2.
அ) மீரா இந்தியன்
ミーラさん インドじん です。
ஆ) சந்தோஷ் ஜப்பானியன்
サントスさん にほんじん です。
3.
அ) மீரா மாணவன் அல்ல
ミーラさんは がくせいじゃ ありません。
ஆ) சந்தோஷ்ம் மாணவன் அல்ல.
サントスさん がくせいじゃ ありません。

மெற்கண்ட வாக்கியங்களில் உள்ளவையே வின் பயன்பாடு.(もவானது மேலும் சில பயன்பாடுகளை கொண்டுள்ளது அது பற்றி பின்வரும் பாடங்களில் விளக்கப்பட்டுள்ளது). இரண்டு ஒரே மாதிரியான பொருளை கொண்ட வாக்கியங்களை பயன்படுத்தும்போது இரண்டாவது வாக்கியத்தில் も பயன்படுகிறது. அது எதிர் மறையான பொருளாகவும் இருக்கலாம், நேர்மறையான பொருளாகவும் இருக்கலாம். ஆனால் மாறிவரும்போது பயன்படுத்தக்கூடாது.
அதாவது
நான் ஆசிரியர் என்று சொல்லும்போது, நான் மாணவர் என்றுதான் சொல்லுமேயொழிய நானும் மாணவன் என்ற பயன்படுத்தமாட்டோம்.

2010年6月28日月曜日

முன்னுரை பாடம் 3: ஜப்பானிய மொழி எண்கள்

ஜப்பானிய மொழியில் இந்தோ - அராபிய எண்கள் மற்றும் ஜப்பானிய எண்கள் பயன்படுத்தப்படுமின்றது.
Number Character Preferred reading On reading Kun reading
0 / 〇* zero rei / れい zero / ぜろ
1 ichi ichi / いち hito(tsu) / ひと(つ)
2 ni ni, ji / に, じ futa(tsu) / ふた(つ)
3 san san / さん mi(ttsu) / み(っつ)
4 yon shi / し yon, yo(ttsu) / よん、よ(っつ)
5 go go / ご itsu(tsu) / いつ(つ)
6 roku roku / ろく mu(ttsu) / む(っつ)
7 nana shichi / しち nana(tsu) / なな(つ)
8 hachi hachi / はち ya(ttsu) / や(っつ)
9 kyū kyū, ku / きゅう, く kokono(tsu) / ここの(つ)
10 jū / じゅう tō / とお
20 二十 ni-jū ni-jū / にじゅう hata(chi) / はた(ち)
30 三十 san-jū san-jū / さんじゅう miso / みそ
100 hyaku hyaku / ひゃく (momo / もも)
1,000 sen sen / せん (chi / ち)
10,000 man man / まん (yorozu / よろず)
100,000,000 oku oku / おく -
1,000,000,000,000 chō chō / ちょう -

இத்தகவல்கள் விக்கீபீடியா தளத்திலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

2010年6月27日日曜日

முன்னுரை பாடம் 2: சீன/ஜப்பானிய உச்சரிப்பு ( On'yomi/Kun'yomi reading)

காஞ்சி
இது சீன எழுத்து வடிவம். ஒவ்வொரு எழுத்தும் ஒரு பொருளை கொண்டதாக இருக்கும்.
山 - やま - யமா - மலை
川 - かわ - கவா - ஆறு
雨 - あめ - அமெ - மழை

தனித்தனியாக ஒவ்வொரு காஞ்சியும் ஒவ்வொரு பொருள் தரும். இரண்டு காஞ்சியை இணைத்தால் ஒரு புதிய அர்த்தத்தை கொடுக்கும்.

உதாரணம் 1:
毎 - まい - மாயி - தினமும்/எப்பொழுதும்
日 - にち - நிச்சி - நாள்/கிழமை.
இரண்டு காஞ்சியையும் சேர்த்து எழுதினால் ஒவ்வொருநாளும் என்ற அர்த்தததை கொடுக்கிறது.
+ = 毎日 = まいにち = மாயிநிச்சி = ஒவ்வொருநாளும்

年-ねん-நென் -வருடம்.
இதற்கு முன்னால் 毎 (மாயி) என்பதை சேர்த்தால் ஓவ்வொருவருடமும் என பொருள்தரும்.
毎 + 年 = 年 = まいねん=மாயிநென் = ஓவ்வொருவருடமும்

ஒவ்வொரு காஞ்சியும் பல்வேறு உச்சரிப்புகளை கொண்டிருக்கும்.

உதாரண்ம் 2:
【いま】[இமா] இப்பொழுது
【しゅう】 [ஸுயு] வாரம்

今週 【こんしゅう】 என்பது இந்த வாரம் என பொருள் தரும். ஆனால் இதை இமாஸுயு என படிக்கக்கூடாது. கொன்ஸுயு என்றுதான் படிக்க வேண்டும்.
(கொன்) + (ஸுயு) = 今週 (கொன்ஸுயு) இந்தவாரம்.

உதாரணம்1ல் காஞ்சியிம் உச்சரிப்பும் பொருளும் மாறாமல் இருக்கிறது. இதை சீன உச்சரிப்பு (Chinese reading/On'yomi) எனப்படும்.

உதாரணம்2 ல் காஞ்சியின் பொருள் ஒன்றாக இருப்பினும் உச்சரிப்பு ஜப்பானிய உச்சரிப்பாகும். இது ஜப்பானிய உச்சரிப்பு (Japanese reading/Kun'yomi) எனப்படும்.

-நவநீதன்

முன்னுரை பாடம் 1: ஜப்பானிய மொழி எழுத்து முறைகள்

முன்னுரை பாடம் 1: ஜப்பானிய மொழி எழுத்து முறைகள்

ஜப்பானிய மொழியானது மூன்று எழுத்து முறைகளை கொண்டது.
1.ஹிரகனா
2.கதாகனா
3. காஞ்சி
4.ரோமாஜி (ஆங்கில எழுத்துகளை எழுதும் முறையாகும். இது ஜப்பானிய எழுத்து முறை கிடையாது.)

1.ஹிரகனா
இது ஜப்பானிய மொழி சொற்களை எழுதுவதற்கு பயன்படுகிறது.
உதாரணம் 1:
தென்ஷா என்பது மின்சார இரயில். இது ஜப்பானிய மொழி சொல் என்பதால் ஹிரகனாவில் でんしゃ என எழுதப்படும்.
2.கதாகனா
இது வேற்று மொழி சொற்கள்,வெளிநாட்டு மக்களின் பெயர்கள் , வெளிநாட்டின் இடங்களின் பெயர்கள் ஆகிய‌வற்றை எழுத பயன்படுத்தப்படுகிறது.
உதாரணம் 2:
கேக் இது ஆங்கில சொல் என்பதால் கதகனாவில் ケーキ(கேகி) என எழுதப்படும்.
3. காஞ்சி
இது சீன எழுத்து வடிவம். ஒவ்வொரு எழுத்தும் ஒரு பொருளை கொண்டதாக இருக்கும்.
உதாரணம் 3:
山 - やま - யமா - மலை
川 - かわ - கவா - ஆறு
雨 - あめ - அமெ - மழை
4.ரோமாஜி
மேற்கூறிய மூன்று முறைகளை தவிர்த்து ரோமாஜி என்ற ஆங்கில எழுத்து முறையும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்திலேயே எழுதுவதைதான் ரோமாஜி முறை என குறிக்கப்படுகிறது. சில சமயங்களில் கம்பெனியில் பெயர்களோ, சுருக்கச்சொற்களோ ஆங்கிலத்தில் எழுதப்படும்.

உதாரணம் 4:
வாக்கியம்:わたしは IMC の かいしゃいん です
உச்சரிப்பு : வாதஷிவா ஐ எம் சி னோ கைஷாஇன் தெஸ்.
பொருள்: நான் ஐ எம் சி கம்பெனி அலுவகர்.
இதில் IMC என்பது ஆங்கில எழுத்திலேயே எழுதப்பட்டுள்ளது. இதுதான் ரோமாஜி முறை என அழைக்கப்படுகிறது.

உதாரணம் 6:
கீழுள்ள வாக்கியத்தில் ஹிரகனா, கதகனா, காஞ்சி மற்றும் ரோமாஜி முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கியம்:私は Lawsonデパートへ いきます.
உச்சரிப்பு : வாதஷிவா லாசன் தெபாதேஏ இக்கிமாஸ்.
பொருள்: நான் லாசன் கடைக்கு போறேன்.

காஞ்சி எழுத்து முறை
Lawson ரோமாஜி
デパート கதகனா
いきます ஹிரகனா

திருத்தங்கள்/பிழைகள்/நிறைகுறைகளை பின்னூட்டத்திலோ navaniithan@gmail.com என்ற மின்னஞ்சலிலோ தெரிய்படுத்தவும்.

2010年6月26日土曜日

வருகைக்கு நன்றி.

இன்னும் சில தினங்களில் தமிழ் வழியில் ஜப்பானிய மொழி பாடங்களை நீங்கள் இவ்வலைதளத்தில் காணலாம்.

Be connected for the Update.

Wishes from tamiljapanese blog.