1.わたしは ミーラ です
நான் மீரா.
2.ミーラさんは がくせいじゃ ありません。மீரா மாணவர் அல்ல.
3.ミーラさんは かいしゃいん です。
மீரா கம்பெனி அலுவகர்.
4.サントスさんも かいしゃいん です。
சந்தோஷ்ம் கம்பெனி அலுவகர்.
இலக்கண விளக்கம்
1. は என்பது ஹா (ha)ஆகும். ஆனால் இதை சாரியையாக(Particle) பயன்படுத்தும்போது わ(வா)(wa) என படிக்க வேண்டும். இது Topic marker என்று அழைக்கப் படுகிறது.
2. です என்பது மரியாதை நிமித்தமாக பயன்படுத்தப் படுகிறது. தமிழில் அவர்கள் என்பது போல்.
3. さん என்பது ஒருவரை மரியாதையாக அழைக்க பயன்படுத்தப்படுகிறது. தமிழில் திரு/திருமதி/செல்வன்/செல்வி さん அனைத்திற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
4. も என்பதும் சாரியை ஆகும். உதாரண வாக்கியத்தில் உள்ள 3மற்றும் 4 இரண்டும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன எனினும், முதலில் は வும் இரண்டாவதாக もம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதல் வாக்கியம் மீரா கம்பெனி அலுவகர். என்று பொருளும், இரண்டாவது வாக்கியம் சந்தோஷ்ம் கம்பெனி அலுவகர். என்றும் பொருள் தருகிறது. நானும் என்று பயன்படுத்துவதற்கு இணையானது.
உதாரணம்.
1.
அ) மீரா ஆசிரியர்
ミーラさんは かいしゃいん です。
ஆ) சந்தோஷ்ம் ஆசிரியர்
サントスさんも かいしゃいん です。
2.
அ) மீரா இந்தியன்
ミーラさんは インドじん です。
ஆ) சந்தோஷ் ஜப்பானியன்
サントスさんは にほんじん です。
3.
அ) மீரா மாணவன் அல்ல
ミーラさんは がくせいじゃ ありません。
ஆ) சந்தோஷ்ம் மாணவன் அல்ல.
サントスさんも がくせいじゃ ありません。
மெற்கண்ட வாக்கியங்களில் உள்ளவையே もவின் பயன்பாடு.(もவானது மேலும் சில பயன்பாடுகளை கொண்டுள்ளது அது பற்றி பின்வரும் பாடங்களில் விளக்கப்பட்டுள்ளது). இரண்டு ஒரே மாதிரியான பொருளை கொண்ட வாக்கியங்களை பயன்படுத்தும்போது இரண்டாவது வாக்கியத்தில் も பயன்படுகிறது. அது எதிர் மறையான பொருளாகவும் இருக்கலாம், நேர்மறையான பொருளாகவும் இருக்கலாம். ஆனால் மாறிவரும்போது பயன்படுத்தக்கூடாது.
அதாவது
நான் ஆசிரியர் என்று சொல்லும்போது, நான் மாணவர் என்றுதான் சொல்லுமேயொழிய நானும் மாணவன் என்ற பயன்படுத்தமாட்டோம்.
0 件のコメント:
コメントを投稿