2010年7月16日金曜日

பாடம் 1.2 தமிழ் வழியில் ஜப்பானிய மொழி (கேள்வி வாக்கியங்கள்)

பாடம்: கேள்வி வாக்கியங்கள்

பெரும்பாலான மொழிகளில் கேள்வி கேட்பதற்கு “?” யை பயன்படுத்துகிறோம், ஆனால் ஜப்பானிய மொழியில் ?விற்கு பதிலாக வாக்கியத்தின் முடிவில் ‘か’ வை பயன்படுத்துகிறார்கள்.

a) サントスさんも  かいしゃいん です。
    சந்தோஷ்ம் கம்பெனி அலுவகர்.
b)サントスさんも  かいしゃいん です
    சந்தோஷ்ம் கம்பெனி அலுவகரா?.

உதாரணங்கள்

1 [あなたは] ミーラさん です
はい、ミーラ です.
விளக்கம்:
நீங்கள்தான் மீரா என்பரா?
ஆம், நான்தான் மீரா.

2.ミーラさんは がくせい です
はい、がくせい です.
விளக்கம்:
மீரா மாணவரா?
ஆம், மாணவர்தான்.

3.サントスさんは エンジニア です
いいえ、 エンジニアじゃ ありませんん。かいしゃいん です。
விளக்கம்:
சந்தோஷ் பொறியியலாளரா?
இல்லை, பொறியியலாளர் இல்லை. கம்பெனி அலுவகர்.
4.あの かたは どなたです
ミーラさんです。 さくら だいがくの がくせい です。
விளக்கம்:
அந்த மனிதர் யார்?
மீரா அவர்கள். சகுரா பல்கலைகழகத்தின் மாணவர் ஆகும்.
5.ミーラさんは なん さい です
16 さい です。
விளக்கம்:
மீராவிற்கு என்ன வயது?
16 வயது.

இலக்கண விளக்கம்

பாடம் 1.1 ல் உள்ளதுபோல ஒரே மாதிரியான கேள்விகள் தொடர்ந்து கேட்கும்போதும் விற்கு பதிலாக பயன்படுகிறது. இலக்கணம்,சாரியை எதுவும் மாறுவதில்லை, வாக்கியத்தின் முடிவில் மட்டும் சேர்த்தால் அது கேள்வியாக மாறிவிடும்.
உங்கள் சந்தேகங்களையும், தேவைகளையும் எங்களுக்கு அனுப்பினால் பதிலளிக்க காத்திருக்கிறோம். மின்னஞ்சல் முகவரி navaniithan@gmail.com
-நவநீதன்

3 件のコメント:

  1. தங்கள் மகத்தான இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்!

    返信削除
  2. தங்கள் அற்புதமான சேவை தொடர வாழ்த்துக்கள்!

    返信削除
  3. வ‌ண‌க்க‌ம் ந‌வ‌நீத‌ன்,
    நீங்க‌ள் தொட‌ங்கி இருக்கும் இந்த‌ செய‌ல் என்னுடைய‌ க‌ன‌வு.
    தொட‌ர்ந்து செய‌ல்ப‌டுங்க‌ள்.

    வாழ்த்துக்க‌ள்.
    அன்புட‌ன்
    அருள்

    返信削除